(எம்.நியூட்டன்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள் இன்று வெளியேறி கூட்டமைப்பையும் அதனோடு இணைந்து செயற்படுகின்றவர்களையும் கொச்சைப்படுத்துகின்றார்கள்.

இது ஏற்கத்தக்கதலல்ல. தமிழ் மக்கள் இதனைப் புரிந்துகொண்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு தங்கள் பலமான வாக்குகளைச் செலுத்தவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற ஜனநாயக் போராளிகள் கட்சியை பல்வேறு விமர்சனங்களை விசமத்தனமாக தெரிவித்து வருகின்றார்கள்.

இது ஏற்புடையது அல்ல. ஆயுதப் பேராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஜனநாயக வழியில் திரும்பிய முன்னாள் போராளிகள் இணைந்து ஒரு கட்சியை ஆரம்பித்து செயற்பட்டு வருகின்றார்கள்.

அவ்வாறு செயற்பட்டு வருபவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து பல செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் கட்சி ஆரம்பிக்கின்றபோது அனைத்துக் கட்சிகளுடனுமே கலந்துரையாடினார்கள். 

அவ்வாறானபோது, கூட்டமைப்பின் செயற்பாடுகளினால் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டு வருகின்றாரகள். இதனைப் பொறுக்காதவர்கள்தான் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றார்கள்.

இவ்வாறு கூறி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கின்றார்கள். கூட்டமைப்புக்குள் வந்து தங்களின் முகவரியைப் பெற்று விட்டு இன்று வெளியேறி கூட்டமைப்பையும் ஜனநாயகப் போராளிகள் கட்சிகள் மீதும் குறை கூறுகின்றார்கள்.

ஜனநாய பேராளிகள் கட்சி பல்வேறு நிகழ்வுகளை திறம்பட ஒழுங்குபடுத்திச் செய்கின்றார்கள். அந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு விட்டு தேர்தல் என்றவுடன் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். 

அரசியல் தேவைக்காக பொய்ப்பிரச்சாரங்கள் செய்யக்கூடாது, போராளிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்தக் கூடாது.

எனவே, மக்கள் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு தங்கள் பலத்தை வழங்கி ஒருமித்த குரலாக செயற்பட ஆணை வழங்கவேண்டும் என்றார்.