வாள்வெட்டு தாக்குதலுக்கு தயாராக இருந்த இரு இளைஞர்கள் கைது 

Published By: Digital Desk 4

30 Jul, 2020 | 05:37 PM
image

வாள் வெட்டு தாக்குதலுக்கு தயாராக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரால் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து கூரிய ஆயுதங்களும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோப்பாய் பகுதியில் நேற்று இரவு சந்தேகத்துக்கு இடமான முறையில் இளைஞர் குழு ஒன்று கூடி உள்ளதாக பொலிசாருக்கு அப் பகுதி மக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது குறித்த இளைஞர் குழு அவ்விடத்தில் இருந்து தப்பித்து செல்ல முற்பட்டுள்ளனர்.இதன்போது பொலிஸார் துரத்தியதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து இரும்புக் கம்பிகள் கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது அதிகரிப்பு ஜனநாயகத்திற்கு...

2026-08-09 17:28:02
news-image

நாமல் ராஜபக்‌ஷக்கு சிறைச்சாலைகளில் அதிக வாக்குகள்:...

2026-08-09 17:51:42
news-image

தென் கொரியாவில் மத சுதந்திரம், கருத்துச்...

2026-08-09 22:16:45
news-image

அரசியலமைப்பு திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது...

2026-08-09 17:53:18
news-image

மாகாண சபை தேர்தல் தாமதத்திற்கு எல்லை...

2026-08-09 17:56:52
news-image

எந்தவொரு வரைவு ஆவணமும் உருவாக்கப்படவில்லை: சிறிதரனுக்கு...

2026-08-09 17:53:01
news-image

நாமல் ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல்...

2026-08-09 20:19:40
news-image

சுற்றுலா வீசாவில் வந்து சட்டவிரோதமாகப் பணியாற்றிய...

2026-08-09 18:04:26
news-image

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக...

2026-08-09 17:33:26
news-image

சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார், கட்டார்...

2026-08-09 17:16:31
news-image

அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாயவில்...

2026-08-09 16:37:05
news-image

பொலிஸாரின் பெயரில் இணையவழி மோசடி ;...

2026-08-09 17:20:47