'கடைக்குச் சென்ற போது இராணுவத்தினர் சுடத் தொடங்கினர்" : பெண் ஒருவர் வாக்குமூலம்

Published By: MD.Lucias

08 Jul, 2016 | 06:57 PM
image

'சம்பவம் நடந்த அன்று நான் காளிமுத்து என்பவரின் கடைக்கு  வெங்காயம் வாங்கச் சென்றேன். இதன்போது வீதியால் வந்த இராணுவத்தினர் சுடத் தொடங்கினர். அங்கு நின்ற பலருடன் உடனே அந்தக் கடைக்குள் புகுந்து விட்டோம்.   இராணுவ வீரர்களில் ஒருவர், என்னை வெளியே வருமாறு அழைத்து தப்பி ஓடுமாறு கூறினார் என ஒன்பதாவது நாளாக சாட்சியமளித்த  குமாரபுரத்தைச் சேர்ந்த 49 வயதுடய லெட்சுமி என்ற பெண் தெரிவித்தார்.

திருகோணமலை கிளிவெட்டி குமாரபுரத்தில் பொதுமக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் வழக்கு விசாரணையில்,  இன்று ஒன்பதாவது நாளாகவும் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன. 

இன்றைய சாட்சி விசாரணைகளில் நான்கு பேர் சாட்சியங்களை வழங்கினர்.

இங்கு மேலும் சாட்சியமளித்த ஜேசுதாசன் லெட்சுமி,

'நான்  எமது கிராமத்தில் உள்ள காளிமுத்து என்பவரின் கடைக்கு வெங்காயம் வாங்குவதற்காக சென்றேன்.  அங்கு மேலும் பலர் நின்று கொண்டிருந்தனர். இராணுவத்தினர் துப்பாக்கி சூடு மேற்கொள்வதை கண்ட பலரும்  கடைக்குள் புகுந்து கொண்டனர். நானும் கடைக்குள் புகுந்தேன். 

இதன்போது கடைக்குள் இருந்த பலரையும் இராணுவத்தினர் சுட்டார்கள்.  அங்குவந்த இராணுவ வீரர்களில் ஒருவரான குமார என்ற இராணுவ வீரர்  கடைக்குள் இருந்த என்னை கையால் அசைத்து கூப்பிட்டார். நான் அவரிடம் சென்ற போது என்னை தப்பி ஓடுமாறு கூறினார். இதனால்தான்  வெடிகாயத்துடன் நான் தப்பித்தேன். அவரைத் தவிர ஏனையவர்கள் துப்பாக்கி சூட்டை நடத்தினார்கள். அதில் பலர் கொல்லப்பட்டார்கள். சிலர் காயப்பட்டார்கள் என்றார்.

இராசையா நாகேஸ்வரி (66) என்பவர் சாட்சியமளிக்கையில், 'நான் வீதியால் சென்று கொண்டிருக்கையில் அவ்வீதியால் வந்த முஸ்லிம் நபர்கள் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர் என கூறி அவசரமாக சென்றனர். நான் உடனே அருகில் இருந்த அழகுதுரை லெட்சுமி என்பவரது வீட்டிற்குள் புகுந்தேன். அங்கு வந்த இராணுவத்தினர் சுட்டனர். இதில் லெட்சுமி சுடப்பட்டு இறந்தார். அதனை நான் நேரில் கண்டேன். நான் பதற்றமடைந்தமையால் சுட்டவர் யாரென்று அடையாளம்  தெரியவில்லை. எனக்கும் இச் சம்பவத்தில் காயம் ஏற்பட்டது என்றார்.

இவர்களுடன்  சிற்றம்பலம் கோணேஸ்வரன்(27), நாகராசா சுதாகரன்(28) என்பவர்களும் சாட்சியமளித்தனர். 

மேலும் விசாரணைகள் தொடரவுள்ளன. விசாரணைகளில் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள், சிவில் கடமையில் சம்பவ தினத்தன்று இருந்த அதிகாரிகளும்  சாட்சியத்திற்கு அழைக்கப்பட வுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04