திரு கோணமலை கடற்படைத் தளத்திற்கருகில் யுவதி ஒருவர் அவரது மைத்துனரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

இச்சம்பவம்  இன்று நண்பகல்  இடம்பெற்றுள்ளது. குறித்த யுவதியின் அக்காவின் கணவரே இக்கொலையை புரிந்துள்ளதாக திருகோணமலை துறைமுக பொலிசார் தெரிவித்தனர்.

கணபதிப்பிள்ளை அஜந்தினி வயது 23 என்ற யுவதியே இவ்வாறு தாக்கப்பட்டு இறந்தவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.