மஸ்கெலியா மற்றும் நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வெவ்வேறு பகுதிகளில் தோட்ட தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மறே தோட்ட வலதல பிரிவில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 11 பெண் தொழிலாளர்களுடன் ஒரு ஆண் தொழிலாளியும் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்து வந்துள்ளதாகவும் மேலும் பலர் தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக  தோட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

அத்துடன் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை தோட்ட பெரிய சூரியகந்தை பிரிவில் தேயிலை பறித்து கொண்டிருந்த போது தேயிலை செடிக்கு அடியில் இருந்த குளவி கூடு கலைந்ததில்  மூன்று பெண்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி லியத்த பிட்டிய தெரிவித்தார்.