உலக புகழ்பெற்ற பாகுபாலி படத்தின் இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் வசித்து வரும், பாகுபாலி படத்தின் இயக்குனர் ராஜமௌலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அவரின் குடும்பத்திற்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராஜமௌலி தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எனக்கும் என்னுடைய குடும்பத்தினந்தருக்கும் சில நாட்களுக்கு முன் லேசான காய்ச்சல் ஏற்பட்டது . அதன்பின் காய்ச்சல் குணமடைந்துவிட்டது. இருந்தாலும் நாங்கள் கொரோனா சோதனை செய்து கொண்டோம். அதில் எங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.

லேசான கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நாங்கள தற்போது வைத்தியர்களின் அறிவுறுத்தலின்படி தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறோம். எங்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை நன்றாகவே இருக்கிறோம்.

உடலில் ஆண்டிபாடி உருவாக காத்துகொண்டு இருக்கிறோம். உடல் நலம் சரியான உடன் வேகமாக, பிளாஸ்மா தானம் கொடுக்க தயாராக இருக்கிறோம், என்று ராஜமௌலி தெரிவித்துள்ளார்.