அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளரான லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவினை மீறிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.