ஆண்களைவிட மத்திம வயதில் உள்ள பெண்கள்தான் அதிக அளவில் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

உலகளவில் பெண்களை அதிக அளவில் தாக்கும் புற்றுநோய் என மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகியவையே இதுவரை பட்டியலிடப்பட்டு வந்தன. ஆனால் தற்போது 30 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அதிகளவில் தாக்கும் புற்றுநோயாக நுரையீரல் புற்றுநோய் இருக்கிறது என்று ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

நுரையீரல் புற்றுநோய்க்கு புகைப்பிடிக்கும் பழக்கம் முக்கிய காரணம் என்றாலும், ஆண்கள் புகை பிடித்தாலும் அதனால் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. அதே தருணத்தில் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டால், அவர்களுக்கு முதலில் Spirometry மற்றும் எலக்ட்ரோ கார்டியோகிராம் ஆகிய பரிசோதனைகளை செய்தபிறகு, Pneumonectomy , Sleeve Resection , Wedge Resection, Secmentectomy, Lobectomy என பல்வேறு சத்திர சிகிச்சைகளின் மூலம், நுரையீரல் புற்று நோயை குணப்படுத்தலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

டொக்டர். செந்தில்குமார்

.