கேரளாவில் காசர்கோடு மாவட்டம் திருக்கரிப்பூர் பகுதியில் நடந்த திருமணத்தில் கலந்துகொண்ட குறைந்தது ஐந்து பேருக்கு  கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருமணத்தில் கலந்துகொண்ட அனைவரையும் பரிசோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

காசர்கோடு மாவட்ட மருத்துவ அதிகாரிகள் புதன்கிழமை இந்த தொற்றாளர்களை உறுதிப்படுத்தியதோடு, அனைத்து தொடர்புகளையும் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துளனர்.

"ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் அனைத்து தொடர்புகளையும் கண்டுபிடித்து வருகிறோம், மேலும் பரிசோதனைகள் நாளைக்குள் செய்யப்படும்" என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

காசர்கோடு மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை 49 பேர் கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டனர். அதில் 32 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களாவர்.

"குறித்த திருமணத்தில்  பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு உட்பட்டது போல் தெரிகிறது" என்று பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து தீவிரமாகக் கருதி, அரசாங்கம் செவ்வாய்க்கிழமை அதிகபட்சம் 20 பேர் மட்டுமே திருமணங்கள் அல்லது இறுதிச் சடங்குகளில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளது. இதற்னு முன் 50 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

சமீபத்தில் கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் திருமணம் மற்றும் இறுதி சடங்கில் கலந்து கொண்ட 70 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், வயநாட்டின் தவின்ஹால் பஞ்சாயத்தில் மேலும் 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்தனர். இறுதி சடங்கு தொடர்பான மொத்த தொற்றுநோய்களை 76 ஆக எடுத்துக் கொண்டனர்.

அப்பகுதியில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பு கொண்ட 210 பேரை பரிசோதனை செய்துள்ளனர்.

கேரளாவில் நேற்று புதன்கிழமை 903 புதிய கொரோனா தொற்றார்கள் வயநாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இது மாநிலத்தின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையை 21,797 ஆக உயர்த்தியது. இதுவைர 68 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.