ஆபிரிக்க நாடான மாலியில் கோர விபத்து ; 19 பேர் பலி, 12 பேர் காயம்

30 Jul, 2020 | 08:16 AM
image

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியின் தலைநகர் பமாகோவில் இருந்து 100 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள உள்ள கனாகாபா என்ற நகரில் கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

கனாகாபா நகரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் வண்டியொன்றே குறித்த விபத்தில் சிக்கியுள்ளது. பஸ்ஸில் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர்.

நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த பஸ் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் வீதியின் நடுவே இருந்த தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு எதிர்த்திசையில் பாய்ந்து எதிரே வந்த லொறியின் மீது குறித்த பஸ் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 12 பேர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்பெயினில் தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து...

2026-02-17 16:02:25
news-image

பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் உட்பட...

2026-02-17 14:39:32
news-image

லண்டனில் தீவிரமாக பரவி வரும் அம்மை...

2026-02-17 12:46:45
news-image

சீனாவில் பட்டாசு கடையில் வெடி விபத்து...

2026-02-16 17:30:07
news-image

நியூசிலாந்தில் சூறாவளி ; போக்குவரத்து பாதிப்பு...

2026-02-16 15:59:58
news-image

இந்திய பிரதமர் மோடி விரைவில் இஸ்ரேலுக்கு...

2026-02-16 15:21:04
news-image

ஆபிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் காலநிலை மாற்றம்...

2026-02-16 14:24:59
news-image

நைஜீரியாவில் 3 கிராமங்களுக்குள் நுழைந்த கும்பல்...

2026-02-16 13:35:05
news-image

ஐந்து பேருக்கு மறுவாழ்வளித்த பத்து மாத...

2026-02-16 10:02:06
news-image

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி விஷம்...

2026-02-15 15:42:16
news-image

ரஷ்யாவில் வட்ஸ்அப் செயலிக்கு தடை 

2026-02-15 11:17:58
news-image

பொது வாழ்வில் கண்ணியம் மறைந்துவிட்டது ;...

2026-02-15 11:24:12