தேர்தல் பிரச்சாரத்திலும் அரசியல் கலாசாரத்திலும் புதிய மாற்றம் - ஜனாதிபதிக்கு மக்கள் பாராட்டு!

30 Jul, 2020 | 07:58 AM
image

குறுகிய காலப் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திலும் அரசியல் கலாசாரத்திலும் மேற்கொண்டுள்ள மாற்றத்திற்கு மக்கள் ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அவ் அறிக்கையில், 

சுவரொட்டிகள், பதாதைகள் மற்றும் மோதல்கள் இல்லாத புதிய தேர்தல் பிரச்சார போக்கொன்று நாட்டில் உருவாகியுள்ளது. அது ஜனாதிபதி தேர்தலில் இருந்து இது வரை அரச தலைவராக ஜனாதிபதி மேற்கொண்ட செயற்பாடுகளின் மகிழ்ச்சியான பெறுபேறாகும் என மக்கள் தெரிவித்தனர். 

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் நேற்று (29) களுத்துறை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, பண்டாரகம சந்தை வளாகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிற்கு வருகை தந்திருந்த போதே மக்கள் இதனை தெரிவித்தனர். 

அபேட்சகர் லலித் எல்லாவலவினால் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

ஜனாதிபதி அவர்கள், முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித்திட்டம் நாட்டின் பெரும்பான்மையான மக்களின் உள்ளங்களை வென்றுள்ளது. எனவே ஜனாதிபதி அவர்களின் கரங்களை பலப்படுத்துவதற்கு கட்சி, நிறம் என்ற பேதமின்றி வாக்குகள் அளிக்கப்படும் என மக்கள் தெரிவித்தனர். அரசியலமைப்பு மாற்றத்தினூடாக நாட்டை கட்டியெழுப்புவதற்கு அந்த அதிகாரத்தை பயன்படுத்துமாறு மக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் ஹொரன சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் பங்குபற்றிய ஜனாதிபதிக்கு மக்கள் உட்சாக வரவேற்பளித்தனர். 

குறைந்த வருமானம் பெறுவோருக்கும் பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் தேர்தலின் பின்னர் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுமென மக்கள் எழுப்பிய வினாவொன்றுக்கு பதிலளிக்கும்போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஃபஹீம் உல் அஜீஸ்...

2025-04-20 09:04:31
news-image

கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவை கொண்டாடும் அனைவருக்கும்...

2025-04-19 18:16:28
news-image

நீதி நிலை நாட்டப்படுவதை உறுதி செய்வதற்கான...

2025-04-19 18:17:18
news-image

குறுகிய அரசியல் நோக்கங்களை தள்ளிவைத்து உண்மையைக்...

2025-04-19 18:17:02
news-image

இன்றைய வானிலை

2025-04-20 06:05:02
news-image

6 மாதங்களில் 6000 பில்லியன் ரூபா...

2025-04-19 17:41:21
news-image

இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்த இந்தியாவுடன் இணக்கப்பாடு...

2025-04-19 14:28:57
news-image

புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தி வடக்கு, கிழக்கு...

2025-04-19 13:11:09
news-image

பொய் மற்றும் ஏமாற்று வித்தைகள் மூலம்...

2025-04-19 17:45:39
news-image

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12...

2025-04-19 17:53:34
news-image

வன்னி காணி விடயங்கள், அபிவிருத்தி விடயங்கள்...

2025-04-19 17:42:39
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-04-19 17:34:39