டிக்டொக் மென்பொருள் செயலியை தடைசெய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
சீன நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டொக் மென்பொருள் செயலியை சீனா உளவு பார்ப்பதற்காக பயன்படுத்தலாம் என்ற அச்சத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமெனக் கருதி டிக்டொக்கை தடை செய்வது குறித்து தாம் பரிசீலித்து வருவதாக ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
டிக்டொக் மென்பொருள் செயலியின் பயன்பாடு குறித்து அமெரிக்காவின் அந்நிய முதலீடு தொடர்பான குழுவினால் பரிசீலிக்கப்பட்டு வருவதுடன் தேசிய பாதுகாப்பு அபாயங்களுக்கான வெளிநாட்டு கையகப்படுத்துபவர்களின் ஒப்பந்தங்கள் குறித்தும் இந்த குழு மதிப்பாய்வு செய்கிறது.
இதேவேளை, டிக்டொக்கை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இந்த வாரம் இறுதிக்குள் டிரம்பிற்கு பரிந்துரை செய்ய குறித்த குழு தீர்மானித்துள்ளது.
இதே குற்றச்சாட்டின் பேரில் இந்தியா சில வாரங்களுக்கு முன் டிக்டொக் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளின் பயன்பாடுகளை தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM