யாழ்ப்பாணம், ஐந்து சந்திப்பகுதியில் வைத்து 33 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண போலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண  போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் பாவனையில்லாத கட்டிடத்தில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த  நிலையிலேயே 33 கிலோ கஞ்சா உட்பட குறித்த இளைஞர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

36 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணையை  மேற்கொண்ட யாழ்.பொலிஸார்  சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.