லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் வளாகத்தில் ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸின் வாடிக்கையாளர் சேவை கருமபீடம்

29 Jul, 2020 | 04:56 PM
image

இலங்கையின் முன்னணி நிறுவனங்களான ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ் மற்றும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ்      இணைந்து தமது வாடிக்கையாளர் சேவை வலையமைப்பு விஸ்தரிக்கும் நோக்கில் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் வளாகத்தில் ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸின் வாடிக்கையாளர் சேவை கருமபீடத்தை நிறுவியுள்ளது. 

இவ்        ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸின் புதிய கருமபீடத்தை நிறுவியதன் ஊடாக இந்நிறுவன வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும்    சகலவிதமான காப்புறுதி சேவைகளும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸின் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர் குழாமினருக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதோடு இக்கருமபீடத்தின் ஊடாக காப்புறுதி திட்டமிடலை பெற்றுக்கொள்ளல், காப்புறுதி திட்டமிடல் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளல், தவணை முறை கொடுப்பனவுகளை மேற்கொள்ளல், நோயாளர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறும் போது சுகாதார காப்புறுதி உரிமைகள் பெற்றுக்கொள்வதற்கான செயன்முறையை விரைவுபடுத்தல் உள்ளடங்கலாக மேலும் பல காப்புறுதி சேவைகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

இவ்வாடிக்கையாளர் சேவை கருமபீடமானது 2020 ஜூலை மாதம் 24ஆம் திகதி ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜகத் வெல்லவத்த மற்றும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் குழம தலைவர் வைத்தியர் பந்துல விஜேசிறிவர்தன ஆகியோரது தலைமைத்துவத்துடன் குறித்த நிறுவன பணிப்பாளர்கள், சிரேஸ்ட முகாமைத்துவ குழாமினர் மற்றும் வாடிக்கையாளர்களது பங்கேற்பில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ் மற்றும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் தமது நிறுவனங்களுக்கிடையிலான தொடர்பினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்       லங்கா ஹொஸ்பிட்டல்ஸ்  , ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ் மோட்டர் ப்ளஸ் லோயல்ட்டி ரிவோட்ஸ் உடன் இணைந்து மோட்டர் ப்ளஸ் பூரண காப்புறுதி உரிமையாளர்களுக்கு சிறப்பு    சலுகைகளை பெற்றுக்கொடுப்பதுடன் காப்புறுதி உரிமையாளர்களுக்கு அவர்களது காப்புறுதி அட்டையை     லங்கா ஹொஸ்பிட்டல்ஸ்க்கு கொடுப்பதன் மூலம் மருத்துவ          பக்கேஜ்களுக்கு      20மூ        வரையிலான சிறப்பு கழிவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ்

1962ஆம் ஆண்டு       தமது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்த ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ் இந்நாட்டிலுள்ள மாபெரும் அரச காப்புறுதி நிறுவனமாகும். இதுவரையில் 211 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துடைமைகளை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் 116 பில்லியன் ரூபா பெறுமதியான ஆயுள் காப்புறுதிகளைக் கொண்ட ஒரேயொரு நிலையான காப்புறுதி நிறுவனமாகும். அத்துடன் நாட்டில் முன்னணி நிதி காப்புறுதி நிறுவனமான ஸ்ரீலங்கா இன்ஷ_ரன்ஸ் AAA(lka) பிட்ச் தரநிலைப்படுத்தலைக் கொண்டுள்ள ஒரேயொரு உள்நாட்டு காப்புறுதி நிறுவனமாகும். அத்துடன் ப்ரேன்ட் பினான்ஸினால் வழங்கப்படும் 2020 ஆம் ஆண்டுக்கான பிரபல விற்பனை நாமங்கள் மூன்றில் இடம்பெற்றுள்ளது. நாடு முழுவதும்158 கிளை வலையமைப்பைக் கொண்டுள்ளது. 

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ்

சுகாதார சேவைப்பிரிவில் சர்வதேச அளவிலான பிரபல நாமத்தையும் தேசியளவிலான ஏராளமான விருதுகளையும் வென்ற இலங்கை வைத்தியசாலையான லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் JCI சர்வதேச தரச்சான்றிதழை 6 தடவை தனதாக்கிக் கொண்ட இலங்கையின் முதல் வைத்தியசாலையாகும்.  அத்துடன் வைத்திய துறை தொடர்பான சுற்றுலா தர அமைப்பில் ( Medical Travel Quality Alliance – MTQUA)   World Repected Medical Tourism   றுழசடன சுநிநஉவநன ஆநனiஉயட வுழரசளைஅ என்ற நாமத்தை வென்ற வைத்தியசாலையாகும்.  அமெரிக்க      மருத்துவ ஆய்வாளர்கள் கல்வியகத்தினால் (CAP) வரவேற்பு பெற்ற ஆய்வுகூடம் உள்ள இலங்கையின் ஒரேயொரு  வைத்தியசாலை லங்கா ஹொஸ்பிட்டல்ஸ்.

மேலதிக விபரங்களுக்கு - அனுஷா திசாநாயக்க – (077 848 4346)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58