மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை  குளத்திற்கு இருவர் தோணியில் தமரைப்பூ பறிக்க சென்ற போது தோணி கவழிழ்ந்ததில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் இன்று புதன்கிழமை (29) பகல் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

திருப்பெருந்துறை 5ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய செல்வராசா சத்தியா என்பவரே இவ்வாறு குளத்தில் மூழ்கி காணாமால் போயுள்ளார். 

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த அவருடைய நண்பர் எஸ்.சுமன் என்பவருடன் திருப்பெருந்துறை காளி கோவில் உற்சவத்திற்கு தமரைப்பூ பறிப்பதற்காக இன்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து சென்று ரிதிதென்னை  குளத்தில் தோணி ஒன்றில் தமரைப்பூ பறிக்க குளத்தின் நடுப்பகுதிக்கு சென்ற நிலையில் தோணி கவிழ்ந்தததையடுத்து இருவரும் நீரில் மூழ்கிய நிலையில் சுமன் நீந்தி தப்பி கரைசேர்ந்துள்ளார் 

அதேவேளை நீரில் மூழ்கிய மற்றயவரை தேடியபோதும் அவர் காணாமல் போனதையடுத்து,பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்று காணாமல் போனவாரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்