ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இன்று கொழும்பு நிதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கை கப்பல் கூட்டுதாபனத்தின் ஊடாக பெறுமதி குறைந்த இரு கப்பல்களை கொள்வனவு செய்து அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.