சீனாவில் நேற்று செவ்வாய்க்கிழமை மாத்திரம் 101 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந் நாட்டு சுகாதார ஆணையகம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாத தொடக்கத்தின் பின்னர் சீனாவில் ஒரே நாளில் கூடிய புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நாளாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. 

உலக நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த போராடி வருகின்ற நிலையில் சீனா தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை எதிர்த்துப் போராட பாதிக்கப்பட்ட பகுதிகளை  மூடுவதற்கு நடவடிக்கையும் எடுத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரத்தின்படி சீனாவில் மொத்தமாக 84,060 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 4,634 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளது.