2016 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய சுற்றுலா விருது வழங்கல்  விழா இம்முறை இலங்கையில் இடம்பெறவுள்ளது.

தெற்காசிய நாடுகளின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் குறித்த விருது வழங்கல் விழா முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த விருது விழாவினை தெற்காசிய விருது வழங்கல் அமைப்பின் இலங்கைக் கிளை மற்றும் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் என்பவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. 

சுற்றுலாத் துறையை பொறுத்தவரையில் நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. வெளிநாட்டு வருவாய்களை அதிகரித்து நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுலாத்துறை பெரும் பங்காற்றுகின்றது. அது மாத்திரமின்றி வேலை வாய்ப்பை அதிகரிக்கும் துறையாகவும் சுற்றுலாத்துறை விளங்குகின்றது .

அதனால் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க வேண்டும் என்பதால் இந்த விருது வழங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த விழாவின் அடிப்படையில் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என தெற்காசிய சுற்றுலா விருது வழங்கல் அமைப்பு தெரிவித்துள்ளது. 

விருது வழங்கலானது சுற்றுலாத் துறையின் 10 பிரிவுகளின் கீழ் 37 வகையான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இதில் ஹோட்டேல், ரெஸ்டூரண்ட் , சுற்றுலா போக்குவரத்து மற்றும் விமானசேவை போன்ற சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய சேவை வழங்குநர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

குறித்த விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கொழும்பிலுள்ள வர்த்தக சம்மேளனத்தில் இடம்பெறவுள்ளது. இதில் 10 பிரிவுகளில் 37வகையான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இதேவேளை, விருதுகளுக்கான பெயர், விபரங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பங்குபற்றுவோர் அனுப்பிவைக்க வேண்டுமென தெற்காசிய சுற்றுலா விருது வழங்கும் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.