தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் 'கர்ணன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

'பரியேறும் பெருமாள் பட புகழ் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'கர்ணன்'. இந்தப் படத்தில் தனுஷ் கதையின் நாயகனான கர்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கிறார்.

இப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு, லால் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 'அசுரன்' படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு 'கர்ணன்' படத்தை தயாரிக்கிறார்.

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் தனுஷுக்கு 'கர்ணன்' படத்தில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் மேக்கிங் காட்சிகள்  வெளியிடப்பட்டன. இதனை தனுஷின் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வைரலாக்கி வருகிறார்கள்.