உஸ்வட்டகெட்டியாவ பகுதியில் கலால் துறை அதிகாரி உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை உஸ்வட்டகெட்டியாவ, பாமுனுகம பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சட்டவிரோத மதுபானம் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான எத்தனோல் ஆகியவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களின் வசமிருந்து 180 மில்லி சட்டவிரோத மதுபானமும் மற்றும் 05 போத்தல் எத்தனோல் ஆகியவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.