கொரோனாவிற்கு எதிராக நோய் தடுப்பாற்றல் மனிதர்களுக்குள் ஏற்பட நீண்ட காலமாகும் - உலக சுகாதார ஸ்தாபனம்

29 Jul, 2020 | 10:09 AM
image

கொரோனாவிற்கு எதிராக மனிதர்களுக்குள் 'ஹெர்ட் இம்யூனிட்டி' எனப்படும் மந்தை நோய் தடுப்பாற்றல்  ஏற்படுவது நீண்ட காலமாகும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி வைத்தியர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது...

'கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஹெர்ட் இம்யூனிட்டி எனப்படும் மந்தை நோய் தடுப்பாற்றல் மனிதர்கள் இயற்கையாக பெறுவதற்கு நீண்ட காலமாகும். எனவே தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதை விரைவுபடுத்த வேண்டும். அதன் மூலமாகத்தான் 'ஹெர்ட் இம்யூனிட்டி' எனப்படும் மந்தை நோய் தடுப்பாற்றல் உருவாக்குவது பாதுகாப்பானதாக இருக்கும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மனிதர்களுக்கு நோய் தடுப்பாற்றல் கிடைத்தால் மட்டுமே 'ஹெர்ட் இம்யூனிட்டி' எனப்படும் மந்தை நோய் தடுப்பாற்றல் என்பது சாத்தியமாகும். உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவதானிப்பின் படி, 50 முதல் 60 சதவீத மக்களுக்கு நோய் தடுப்பாற்றல் கிடைத்தால்தான் இம்முறை சாத்தியம்.

'ஹெர்ட் இம்யூனிட்டி' முறை என்பது மக்கள்தொகையில் பெரும்பாலானவர்களை தொற்று நோய்க்கு எதிராக, நோய் தடுப்பாற்றல் உள்ளவர்களாக மாற்றுதலாகும். அதாவது தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து குணமடைவார்கள் அந்த நோய் தடுப்பாற்றல் பெறுதலோ அல்லது தடுப்பூசி மூலம் நோய் தடுப்பாற்றல் பெறுவதோ ஆகும். இதன் மூலம் நோய் தடுப்பாற்றல் இல்லாதவர்களுக்கு, தொற்று பரவுவது தடுக்கப்படும். தற்போது உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனாத் தொற்றிலிருந்து தப்பிக்க நோய் தடுப்பாற்றலை அதிகரிக்கச் செய்வதே சிறந்த தீர்வாகும்.

ஒரு தடுப்பூசி மூலம் தொற்றைத் தடுப்பது மிகவும் எளிதானது. மக்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து போகாமல் நாம் அதை விரைவாக அடைய முடியும். அதே தருணத்தில் தொற்று நோய்களின் மூலம் இயற்கையாகவே மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கும், அவ்வாறு செய்வது மிகவும் நல்லது. எங்களுக்கு பல தொற்று நோய்கள் இருக்கும். துரதிஷ்டவசமாக நாம் காணும் இழப்புகளும் அதிகமாக இருக்கும்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவதானிப்பின் படி, சிகிச்சை முறைகள் இறப்பு விகிதங்களை குறைக்கவும், மக்கள் தங்கள் வாழ்க்கையை தொடரவும், 50 முதல் 60 சதவீத மக்களுக்கு நோய் தடுப்பாற்றல் கிடைத்தால்தான், 'ஹெர்ட் இம்யூனிட்டி' முறை சாத்தியம். அந்த வகையில் இயற்கையாக அதைப் பெறுவதற்கு நாம் இன்னும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அங்குள்ள மக்களில் பொதுவாக 5 முதல் 10 சதவீதம் மட்டுமே நோய் தடுப்பாற்றலை பெற்றிருக்கிறார்கள். இன்னும் சில நாடுகளில் அதிகபட்சமாக 20 சதவீதம் மக்கள் மட்டுமே நோய்த்தடுப்பாற்றலை பெற்றிருக்கிறார்கள்.

இந்நிலையில் இயற்கையாக நோய் தடுப்பாற்றல் பெறுவதற்கு நாடு முழுவதும் நோய்த்தொற்று அலை அலையாக பரவ வேண்டும். அதன் மூலம் தடுப்பாற்றல் கிடைக்கும். இயற்கையாக மனிதர்கள் 'ஹெர்ட் இம்யூனிட்டி' பெற வேண்டுமென்றால் 70 முதல் 80 சதவீதம் வரை நோய் தடுப்பாற்றலை பெற வேண்டும் என்று கூட சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கருத்தின்படி தடுப்பூசி மூலமே மக்கள் நோய் தடுப்பாற்றலை பெறுவது தான் பாதுகாப்பானது. மக்கள் நோயால் பாதிக்கப்படாமல் நோய் எதிர்ப்பு சக்தியை பெறமுடியும். ஆதலால் இயற்கையாக நோய்த்தடுப்பாற்றலைப் பெறுவதைவிட தடுப்பூசி மூலம் நோய் தடுப்பாற்றலை பெறுவது தான் சிறந்த வழி.

கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி மனிதர்களுக்கான பரிசோதனையை வெற்றிகரமாக முடித்து விட்டாலும், இந்த ஆண்டு இறுதிக்குள் 2 நிறுவனங்களின் தடுப்பூசி தயாராகிவிடும். ஆனால் உலகில் கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என்பதால், அனைவருக்கும் கிடைக்க சிறிது காலமாகும். மக்கள் நோய்த் தடுப்பாற்றலைப் பெறுவதற்கு அடுத்த ஆண்டு வரை காத்திருக்க தயாராக வேண்டும்.

அதுவரை இந்த நோய்த்தொற்றுடன் நாம் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். தற்போது இந்த நோய்த்தொற்றின் பரவலை குறைக்க நாம் சமூக இடைவெளியை பராமரித்தல், கை கழுவுதல், முகக் கவசங்கள் அணிவது போன்ற சுகாதார நோய் தடுப்பு முறையை அனைவரும் பின்பற்ற வேண்டும்.: என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04