அனுராதபுரம் ராஜாங்கனை பகுதிக்கான தபால் மூல வாக்களிப்பானது இன்று இடம்பெறவுள்ளது.

இப் பகுதியில் இருந்து பல புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டமையினால் ராஜாங்கனை பகுதிக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. 

இதனால் குறித்த பகுதிக்கான தபால் மூல வாக்களிப்பு பணிகளும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

எனினும் ராஜாங்கனையில் பெரும்பாலான பகுதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளமையினால் தபால் மூல வாக்களிப்பு இன்று அங்கு இடம்பெறுகிறது.

அதன்படி தபால் மூல வாக்காளர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜாங்கனை செயலக அலுவலகம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமானை, வலயக் கல்வி அலுவலகம் ஆகியவற்றுள் தங்களது வாக்குகளை பதிவுசெய்ய முடியும்.

ரஜாங்கனை பிரதேச செயலகத்துக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகப் பணியானது நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் ஒகஸ்ட் 02 ஆம் திகதிக்குள் அதனை நிறைவுசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.