தான் தேர்தலில் வெற்றிபெற்றால் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான  வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக தெரிவிக்கும் கம்பஹா மாவட்டத்தின் சுயேட்சை வேட்பாளர்  பெதும் கேர்னர், பெண்களின் பிரதிநிதித்துவத்தின் குறைபாடு ஜனநாயகத்து பாதகமாக அமையக்கூடுமெனவும் தெரிவித்தார்

களனியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்

இன்று நாட்டிலுள்ள சனத்தொகையை மய்யப்படுத்தி பார்க்கும் போது பாராளுமன்றத்தின் பெண்கள் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை எனவும்,  102 சதவீதமான நாட்டில் பெண்களில் சதவீதம் காணப்படுகின்ற போதும் 13 பெண்கள் மாத்திரமே நாடாளுமன்றத்தை பிரதிநிதிதுவப்படுத்துகின்றனர் எனவும் தெரிவித்தார்

அதன்படி, பாராளுமன்றத்தில் பெண்களின் அங்கத்துவம்  5 சதவீதமாக மாத்திரமே உள்ளதெனவும்இந்த நிலைமை ஆரோக்கியமானதொரு நாடாளுமன்ற கட்டமைப்புக்கு வழி செய்யாதெனவும் தெரிவித்தார்

அதேபோல் எட்டாவது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பெண்கள் அனைவரும்சம்பிரதாயபூர்வமான அரசியல் கட்சிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்ததோடு, அரசியல் குடும்பங்களின் வழி வந்ததாலேயே நாடாளுமன்த்துக்கு தெரிவாகியிருந்தனர் எனவும் தெரிவித்தார்

அதை தவிர ஏனைய சிலர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தாலும், அவர்கள் நடிகைகள் என்பதே குறிப்பிடத்ததென தெரிவித்த அவர்இவ்வாறானவர்களால் மக்கள் பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடியாது என்பதோடு, அவர்கள் உண்மையான அரசியல் தலைவர்களாக இருக்க முடியாதெனவும் தெரிவித்தார்.

உலகின் முதலாவது பெண் பிரதமரையும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட பெண் ஜனாதிபதியையும் முதலாவதாக உருவாக்கிகொண்ட நாடென பெருமை பேசிக்கொண்டாலும், பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதில் அக்கறை காண்பிப்பதில்லை என்றார்.