(செ.தேன்மொழி)

2020 ஆம் ஆண்டு பிறக்கும் போது நாட்டு மக்களின் வதிவிட பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, நிலம் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்காக செயலணி மற்றும் நடமாடும் சேவையுடாக நிலவுரிமை பத்திரங்களை பெற்றுக் கொடுப்பதாகவும் கூறினார்.

தெஹிவலை பகுதியில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

முழு நாடும் தீர்மானமிக்க தருணத்தில் இருக்கின்றது. முழு நாடும் எதிர்நோக்கி வரும் பொருளாதார பிரச்சினைகளை தீர்பதற்கு முறையான திட்டங்களை மேற்கொள்வதுடன், வாழ்வாதார பிரச்சினையை எதிர்நோக்கி வரும் நாளாந்த ஊதியம் பெற்றுவாழும் மக்கள், சுயதொழிலாளர்கள் மற்றும் சாதாரண மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்காக ஒரு மாதத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் நிதியை பெற்றுக் கொடுப்போம். இதேவேளை நாங்கள் ஆட்சியமைத்து 24 மணித்தியாலயத்திற்குள் எரிபொருளின் விலையை குறைப்போம்.

உலகச் சந்தையில் எரிபொருள் விலை குஙைந்துள்ள நிலையில் இதன் பன்களை நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். எரிபொருளின் விலை குறைந்தால் போக்குவரத்து செலவு,  பொருட்களின் விலை என்பன குறைவடைவதுடன், மக்களின் வாழ்வாதர செலவு குறையும். 

இந்நிலையில் நாங்கள் பெற்றுக் கொடுக்கும் 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் , வாழ்வாதர செலவுகள் குறையும் போது சேமிப்பு அதிகரிக்கும். இதனூடாக மக்களை மையப்படுத்திய பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும்.

நாட்டு மக்களின் வறுமை தொடர்பில் ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் பேசப்பட்டு வருகின்றபோதிலும், எந்த அரசாங்கமும் அதனை தீர்பதற்கு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று பலர் தங்களது தொழில்வாய்ப்புகளை இழந்துள்ளனர். தனியார் துறை மிகவும் பாதிப்படைந்துள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு எமது அரசாங்கத்தில் நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.

யுனிசெப் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டி ஆய்வொன்றின் அடிப்படையில் இலங்கையில் 30 வீதமான பேர் போதிய உணவு இன்றி இருப்பதாக தெரிவித்திருக்கின்றது. இவ்வாறான நிலையில் அரசாங்கம் எவ்வாறு அமைதியாக இருக்கின்றது. மக்களின் கஷ்டங்களுக்கு இந்த அரசாங்கத்திடம் நிரந்தர தீர்மானமில்லை. நாங்கள் மக்களின் கஷ்டம் தொடர்பில் புரிந்துக் கொள்ளக்கூடிய அரசாங்கத்தை உருவாக்க தயாராகவே இருக்கின்றோம்.

போதைப் பொருட்களை ஒழிப்பதாக அரசாங்கம் தெரிவித்தர்லும். அது இன்று பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த கடத்தல்கார்கள் தங்களது செயற்பாடுகளுக்கு பல்கலைக்கழக மாணவர்களையும் பயன்படுத்தி ஈசிகேஸ் முறையில் கடத்தல் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளனர். இதற்கு எதிராக முறையான சட்டத்தை செயற்படுத்த வேண்டும். இந்த விடயம் தொடர்பில் சிங்கப்பூரில் காணப்படும் சட்டவிதிகளை இங்கும் செயற்படுத்த நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். 

இதேவேளை வாடகை வீடுகள், கூட்டு குடும்பங்கள் மற்றும் தோட்டங்களில் வாழ்ந்து வரும் மக்களின் வதிவிட பிரச்சினையை தீர்பதற்காக அனைவருக்கும் வீடுகளை அமைத்துக் கொடுப்பதுடன் , 2020 ஆண்டு ஆரம்பமாகும் போது அனைவருக்கும் வீடகள் பெற்றுக்  கொடுக்கப்படுவதுடன், நிலத்திட்டம் தொடர்பில் செயலணி மற்றும் நடமாடும் சேவைகள் ஊடாக பிரதமரினால் அனைவருக்கும் நிலவுரிமைப்பத்திரம் வழங்கப்படும்.(செ.தேன்மொழி)

2020 ஆம் ஆண்டு பிறக்கும் போது நாட்டு மக்களின் வதிவிட பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச , நிலம் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்காக செயலணி மற்றும் நடமாடும் சேவையுடாக நிலவுரிமை பத்திரங்களை பெற்றுக் கொடுப்பதாகவும் கூறினார்.

தெஹிவலை பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

முழு நாடும் தீர்மானமிக்க தருணத்தில் இருக்கின்றது. முழு நாடும் எதிர்நோக்கி வரும் பொருளாதார பிரச்சினைகளை தீர்பதற்கு முறையான திட்டங்களை மேற்கொள்வதுடன் , வாழ்வாதார பிரச்சினையை எதிர்நோக்கி வரும் நாளாந்த ஊதியம் பெற்றுவாழும் மக்கள் , சுயதொழிலாளர்கள் மற்றும் சாதாரண மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்காக ஒரு மாதத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் நிதியை பெற்றுக் கொடுப்போம். இதேவேளை நாங்கள் ஆட்சியமைத்து 24 மணித்தியாலயத்திற்குள் எரிபொருளின் விலையை குறைப்போம்.

உலகச் சந்தையில் எரிபொருள் விலை குஙைந்துள்ள நிலையில் இதன் பன்களை நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். எரிபொருளின் விலை குறைந்தால் போக்குவரத்து செலவு ,  பொருட்களின் விலை என்பன குறைவடைவதுடன் , மக்களின் வாழ்வாதர செலவு குறையும். இந்நிலையில் நாங்கள் பெற்றுக் கொடுக்கும் 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் , வாழ்வாதர செலவுகள் குறையும் போது சேமிப்பு அதிகரிக்கும். இதனூடாக மக்களை மையப்படுத்திய பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும்.

நாட்டு மக்களின் வறுமை தொடர்பில் ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் பேசப்பட்டு வருகின்றபோதிலும், எந்த அரசாங்கமும் அதனை தீர்பதற்கு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று பலர் தங்களது தொழில்வாய்ப்புகளை இழந்துள்ளனர். தனியார் துறை மிகவும் பாதிப்படைந்துள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு எமது அரசாங்கத்தில் நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.

யுனிசெப் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டி ஆய்வொன்றின் அடிப்படையில் இலங்கையில் 30 வீதமான பேர் போதிய உணவு இன்றி இருப்பதாக தெரிவித்திருக்கின்றது. இவ்வாறான நிலையில் அரசாங்கம் எவ்வாறு அமைதியாக இருக்கின்றது. மக்களின் கஷ்டங்களுக்கு இந்த அரசாங்கத்திடம் நிரந்தர தீர்மானமில்லை. நாங்கள் மக்களின் கஷ்டம் தொடர்பில் புரிந்துக் கொள்ளக்கூடிய அரசாங்கத்தை உருவாக்க தயாராகவே இருக்கின்றோம்.

போதைப் பொருட்களை ஒழிப்பதாக அரசாங்கம் தெரிவித்தர்லும். அது இன்று பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த கடத்தல்கார்கள் தங்களது செயற்பாடுகளுக்கு பல்கலைக்கழக மாணவர்களையும் பயன்படுத்தி ஈசிகேஸ் முறையில் கடத்தல் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.இதற்கு எதிராக முறையான சட்டத்தை செயற்படுத்த வேண்டும். இந்த விடயம் தொடர்பில் சிங்கப்பூரில் காணப்படும் சட்டவிதிகளை இங்கும் செயற்படுத்த நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். இதேவேளை வாடகை வீடுகள் , கூட்டு குடும்பங்கள் மற்றும் தோட்டங்களில் வாழ்ந்து வரும் மக்களின் வதிவிட பிரச்சினையை தீர்பதற்காக அனைவருக்கும் வீடுகளை அமைத்துக் கொடுப்பதுடன் , 2020 ஆண்டு ஆரம்பமாகும் போது அனைவருக்கும் வீடகள் பெற்றுக்  கொடுக்கப்படுவதுடன், நிலத்திட்டம் தொடர்பில் செயலணி மற்றும் நடமாடும் சேவைகள் ஊடாக பிரதமரினால் அனைவருக்கும் நிலவுரிமைப்பத்திரம் வழங்கப்படும்.