கொரோனா அச்சம் காரணமாக அனுராதபுரம், ராஜாங்கனை பகுதியில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை பல கட்டங்களில் நீக்குவதற்கு நடவடிக்க‍ை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

சிறிமாபுர, களுந்தேகம சந்தைக்கு பின்னாலுள்ள பகுதி தவிர்ந்த முதலாம்வெளி மற்றும் இரண்டாம்வெளி பிரதேசங்களுக்கான பயண வரையறை நேற்று தளர்த்தப்பட்டது.

இதேவேளை ராஜாங்கனை சுகாதார பிரிவு 01,03,05, 06  ஆகிய பகுதிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் நாளை நீக்கப்படவுள்ளது.

ராஜாங்கனை பகுதியில் பல கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினால் ஜூலை 13 ஆம் திகதி குறித்த பகுதிக்கான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

எனினும் கடந்த 19 ஆம் திகதி முதல் இதுவரை இந்த பிரதேசங்களில் எந்தவொரு தொற்று நோயாளரும் இணங்காணப்படவில்லை. தற்போது ராஜாங்கனை பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கருத்திற் கொண்டு பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.