குருணாகலையில் அழிக்கப்பட்ட புவனேகபாகு அரச சபை தொல்பொருள் தளம் தொடர்பான அனைத்து கோப்புகளையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு குருணாகல் நீதிமன்ற நீதிவான், குருணாகல் மேயருக்கு உத்தரவிட்டார்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு செயலாளர் நிஷார ஜெயரத்ன, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் நீதிவான் இந்த உத்தரவினை இன்று பிறப்பித்துள்ளார்.

தொல்பொருள் திணைக்களம் அளித்த புகார் தொடர்பாக ஒரு சிரேஷ்ட சட்டத்தரணி, இன்று சட்டமா அதிபர் சார்பில் குருணாகல் நீதிவானுக்கு பல கோரிக்கைகளை முன்வைத்தார்.

அதன்படி நீதிவான் மேயருக்கு, அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் இன்று நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு அறிவித்தார். 

இதற்கிடையில், சட்டமா அதிபரின் வேண்டுகோளின் பேரில் குருணாகல் நகர அபிவிருத்தி குழுவின் கூட்டங்களுடன் தொடர்புடைய அனைத்து கோப்புகள் மற்றும் குழுவின் கூட்ட குறிப்புக்களை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் வடமேல் மாகாண ஆளுநனருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பான நிபுணர் குழு தொகுத்த அறிக்கையும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டும் உள்ளது.