வாக்காளர் அட்டை விநியோகம் நாளையுடன் நிறைவு!

28 Jul, 2020 | 06:23 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் நடவடிக்கை நாளையுடன்  நிறைவடைகின்றது என பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை உரியவர்களுக்கு தபால் மூலம் விநியோகிக்கும் நடவடிக்கை தொடர்பாக தெரிவிக்கையலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வமான வாக்காளர் அட்டைகளை தபால் மூலம் விநியோகிக்கும் நடவடிக்கை கடந்த மாதம் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டது. தபால் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற ஒருகோடி 63 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன. அது 96சதவீதமாகும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தபால் திணைக்களத்துக்கு மொத்தமாக ஒருகோடி 69 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. அதன் பிரகாரம் சுமார் 1.5வீதமான  உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாமல் இருக்கின்றன. அவை வாக்காளர்களின் பிரதேசங்களில் அமைந்திருக்கும் தபால் நிலையங்களில் இருந்து எதிர்வரும் 5ஆம் திகதிவரை உரிய அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் வேட்பாளர்களினால் தனிப்பட்ட ரீதியில் வாக்காளர்களுக்கு அனுப்பப்படும்  தேர்தல் பிரசார பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை நாளை மறுதினம் 30ஆம் திகதியுடன் நிறுத்தப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். கட்டைக்காடு கடற்கரையில் கொக்கெய்ன் போதைப்பொருள்...

2025-02-08 11:02:22
news-image

முல்லைத்தீவில் பஸ் சாரதி மீது வாள்வெட்டுத்...

2025-02-08 09:59:53
news-image

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவன்...

2025-02-08 09:57:57
news-image

சுகாதாரத்துறை சார் ஊழியர்களுக்கான பணியிடமாற்றத்துக்கு நிறைவுகாண்...

2025-02-07 20:16:30
news-image

ஒரு சில தமிழ், முஸ்லிம் தலைவர்கள்...

2025-02-07 20:22:35
news-image

இன்றைய வானிலை

2025-02-08 06:05:17
news-image

புளியங்குளத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது...

2025-02-08 02:19:36
news-image

வவுனியாவில் முச்சக்கர வண்டியின் மேலதிக பாகங்களுக்கு...

2025-02-08 01:58:23
news-image

மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க...

2025-02-07 20:28:48
news-image

தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகத்தினருக்கும், வடக்கு...

2025-02-08 02:10:13
news-image

மலையக மக்களை 'மலையகத் தமிழர்கள்" என...

2025-02-07 20:05:32
news-image

மலையக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை...

2025-02-07 21:18:41