பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு தேவையான சுகாதார வழிகாட்டல் ஆலோசனைகளின் தொகுப்பு பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் டாக்டர் லக்ஷ்மன் கம்லாத் தெரிவித்துள்ளார்.

அதன்படி சுகாதார வழிகாட்டல் ஆலோசனைகளின் தொகுப்பானது பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்கவிடம் அடுத்த வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த சுகாதார  ஆலோசனைகள் தொகுப்பில் அறைகள், சிற்றுண்டிச்சாலை மற்றும் பாராளுமன்ற நூலகம் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயகவின் கோரிக்கைக்கு அமைவாகவே இந்த வழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சினால் தொகுக்கப்பட்டு வருகிறது.