தெற்கு அதிவேக வீதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மிஹிந்தலை மஹகனதராவ சந்தியில் வெங்காயம் ஏற்றிச் சென்ற லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி குடை சாய்ந்துள்ளது.

பின்புற டயர் வெடித்து லொறியை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.