(எம்.ஆர்.எம்.வஸீம்)
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் நடவடிக்கை நாளையுடன் நிறைவடைகின்றது என பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை உரியவர்களுக்கு தபால் மூலம் விநியோகிக்கும் நடவடிக்கை தொடர்பாக தெரிவிக்கையலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வமான வாக்காளர் அட்டைகளை தபால் மூலம் விநியோகிக்கும் நடவடிக்கை கடந்த மாதம் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டது. தபால் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற ஒருகோடி 63 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன. அது 96 சதவீதமாகும்.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தபால் திணைக்களத்துக்கு மொத்தமாக ஒரு கோடி 69 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. அதன் பிரகாரம் சுமார் 1.5 வீதமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாமல் இருக்கின்றன.
அவை வாக்காளர்களின் பிரதேசங்களில் அமைந்திருக்கும் தபால் நிலையங்களில் இருந்து எதிர்வரும் 5 ஆம் திகதிவரை உரிய அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் வேட்பாளர்களினால் தனிப்பட்ட ரீதியில் வாக்காளர்களுக்கு அனுப்பப்படும் தேர்தல் பிரசார பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை நாளை 30 ஆம் திகதியுடன் நிறுத்தப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM