மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படமான 'ராணுவ வீரன் ராம் போரூற்றி எழுதிய காதல் கதை' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான 'வாயை மூடி பேசவும்' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தாலும், மணிரத்தினம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி' என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் துல்கர் சல்மான். 

இவர் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து வந்தாலும், இடையிடையே தமிழ் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்தவகையில் தமிழில் இவர் 'சோலோ',' நடிகையர் திலகம்',' கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்',' வான்' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். 

இதில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற திரைப்படம் அண்மையில் வெளியாகி, வணிகரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இவருக்கு தமிழகத்திலும் ஏராளமான ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

இன்று 35 பிறந்தநாள் காணும் இவருக்கு இவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் புதிய திரைப்படமான,' ராணுவ வீரன் ராம் -போரூற்றி எழுதிய காதல் கதை' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. அதனை அவருடைய ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த படத்தின் கதை 1964 ஆம் ஆண்டு பின்னணியில் நடைபெறுவதால், அந்த காலகட்டத்தில் ராணுவ வீரர்கள் அனுப்பும் டெலிகிராம் என்ற வடிவில் புதிய படத்தின் தோற்றத்தை வடிவமைப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.