மாணவர்களுக்கு கழிவு முகாமைத்துவ விழிப்புணர்வு செயற்திட்டம் : ஹொல்சிம் லங்கா நடவடிக்கை

Published By: Priyatharshan

08 Jul, 2016 | 03:31 PM
image

பாடசாலைகளில் பெருமளவு கழிவுகள் சேர்கின்றன. முறையான கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை பற்றி அறிந்துகொள்வதன் மூலமாக, சூழலுக்கும், தமது குடும்பத்துக்கும் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை பாடசாலை மாணவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

லஃபார்ஜ்ஹொல்சிம் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான ஹொல்சிம் லங்கா, சூழல் பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் முன்னோடியாக திகழ்வதுடன், புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் தொடர்ச்சியான பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்திருந்தது.

500க்கும் அதிகமான பாடசாலை மாணவர்களை இந்த நிகழ்ச்சித்திட்டம் இலக்காகக் கொண்டிருந்ததுடன், புனித. அன்ரிவ்ஸ் கல்லூரி, மெதநந்த வித்தியாலயம், கல்லடி சிங்கள வித்தியாலயம், பாலாவி சிங்கள வித்தியாலயம் மற்றும் பாலாவி முஸ்லிம் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளின் மாணவர்கள் இவ்வாறு பங்கேற்றிருந்தனர்.

ஹொல்சிம் லங்கா செயற்திட்டம் என்பது, கழிவு முகாமைத்துவம் தொடர்பில் அதன் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தைக் கொண்டு இந்த செயற்திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், மீள்சுழற்சி செயற்பாடுகள் மூலம் சூழல் நிலைபேறான செயற்பாடுகளை அடிமட்டத்தில் முன்னெடுத்து பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது.

பாடசாலைகளுக்கு கழிவுகளை கொட்டும் குப்பை வாளிகள் வழங்கப்பட்டிருந்ததுடன், கழிவுகளை கட்டுப்படுத்திக் கொள்வது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் அறிவுறுத்தல் பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களின் மாற்றமடையும் மனநிலைகள் மற்றும் அருகாமையில் காணப்படும் பகுதிகளில் குப்பைகளை வீசுவதை தவிர்க்கும் வகையில் சுவரொட்டிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இளைஞர்கள் மத்தியில் கழிவு வேறாக்கல் மற்றும் மீள்சுழற்சிக்குட்படுத்தல் தொடர்பில் அடிப்படையான விடயங்களை தெரியப்படுத்துவது என்பதில் நிறுவனம் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளதுடன், நிலைபேறான சூழலை உருவாக்குவதில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சம் என்பதில் நிறுவனம் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளது.

ஹொல்சிம் லங்காவின் நிலைபேறான செயற்பாடுகள், தொடர்பாடல்கள் மற்றும் வெளியக விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி பர்சானா கான் கருத்து தெரிவிக்கையில்,

“சமூகப் பொறுப்புணர்வு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், ஹொல்சிம் லங்கா தொடர்ச்சியாக எமது சமூக அபிவிருத்தியுடன் தொடர்புடைய செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

புத்தளம் பாடசாலைகளுடன் இணைந்து நாம் அண்மையில் முன்னெடுத்திருந்த நிகழ்வின் மூலமாக, முறையான கழிவு காமைத்துவத்தின் ஊடாக சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன” என்றார்.

“நாம் சிறுவர்களை சென்றடைந்துள்ளோம், இதன் மூலம் சமூக மற்றும் சூழல் மீது அக்கறை கொண்ட புதிய ஒரு தலைமுறையை எம்மால் கட்டியெழுப்ப முடியும் என்பது எமது நம்பிக்கை” என்றார்.

ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட் பற்றி

சர்வதேச ரீதியில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் லபார்ஜ்ஹொல்சிம் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட் செயற்படுகிறது. பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை குடிமகன் எனும் வகையில்ரூபவ் கம்பனி பொருளாதாரரூபவ் சமூக மற்றும் சூழல் சார் செயற்பாடுகளை நிலைபேறான அபிவிருத்திக்கமைய முன்னெடுத்து வருகிறது.

இலங்கையில் புகழ்பெற்ற கீர்த்தி நாமத்தை பதிவு செய்துள்ள ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட், பல்வேறு வகையான சீமெந்து உற்பத்திகளை நாடு முழுவதும் வழங்கி வருகிறது. அத்துடன், ஹொல்சிம் புத்தாக்கம் மற்றும் அப்ளிகேஷன் நிலையத்தினூடாக தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வழங்கி வருகிறது. 

இதனூடாக பாரிய திட்டங்களுக்காக வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான சீமெந்துக் கலவையை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். நாடு முழுவதும் பரந்தளவு காணப்படும் விநியோகஸ்த்தர் வலையமைப்பைக் கொண்டு தனது செயற்பாடுகளை நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.

“இலங்கையின் எதிர்காலத்துக்கான அத்திபாரத்தினை கட்டியெழுப்புவது” எனும் தொனிப்பொருளுக்கமைய இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுங்கத் திணைக்களத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம்...

2024-05-21 17:20:25
news-image

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 'மிகவும்...

2024-05-20 17:37:24
news-image

"IT Gallery - Hikvision Partner...

2024-05-20 17:31:03
news-image

உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறையுடன் முன்னோக்கிச் செல்லும்...

2024-05-20 17:33:11
news-image

2023 ஆம் ஆண்டறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கியது...

2024-05-20 15:36:42
news-image

பான் ஏசியா வங்கியின் ட்ரெயில்பிளேசர் வருடாந்த...

2024-05-15 11:04:03
news-image

20 ஆண்டுகளாக தேசத்தை வலுப்படுத்தும் ஜோன்...

2024-05-14 14:16:40
news-image

கூட்டுறவு சிக்கனம் கடன் வழங்கும் சங்கத்துடன்...

2024-05-14 15:24:32
news-image

Southern MICE Expo 2024 கண்காட்சி...

2024-05-14 13:48:20
news-image

பெருமளவு எதிர்பார்ப்புகள் நிறைந்த e-bicycle நிகழ்வான...

2024-05-14 12:41:23
news-image

"தலையால் சிந்தியுங்கள்" சந்தைப்படுத்தல் பிரசாரத்தை முன்னெடுக்கும்...

2024-05-11 19:12:22
news-image

9 ஆவது தடவை கட்டுமானம், மின்வலு...

2024-05-11 19:10:03