சென்னை வெள்ள நிவா­ரண பணி­க­ளுக்­காக மகா­ராஷ்­டிர மாநிலம் அக­ம­து­நகர் மாவட்­டத்தைச் சேர்ந்த பாலியல் தொழி­லா­ளர்கள் இந்திய மதிப்பில் ஒரு இலட்சம் ரூபா பணத்தை வழங்­கி­யுள்­ளனர்.

"சினே­கா­லயா" என்ற தொண்டு நிறு­வனம், அக­ம­து­ந­கரில் நேற்­று­முன்­தினம் ஏற்­பாடு செய்த நிகழ்ச்­சியில், ரூபாய் 1 இலட்­சத்­துக்­கான காசோ­லையை மாவட்ட ஆட்­சி­யா­ளர் அனில் கவ­டே­விடம் அவர்கள் வழங்­கி­யுள்­ளனர்.

இது­பற்றி "சினே­கா­லயா" நிறு­வனர் கிரிஷ் குல்­கர்னி கூறு­கையில், சென்னை வெள்ள பாதிப்பைப் பற்றி கேள்­விப்­பட்டு, கடந்த 4 நாட்­க­ளாக இந்த பெண்கள் மன உளைச்­சலில் இருந்­தனர். மாவட்­டத்தில் மொத்தம் உள்ள 3000 பாலியல் தொழி­லா­ளர்­களில் 2000 பேர் இந்த நிதியில் தங்கள் பங்கை கொடுத்­துள்­ளனர். மேலும், கடந்த 4 நாட்­க­ளாக தினமும் ஒருவேளை மட்டுமே அவர்கள் சாப் பிட்டுள்ளனர் என்றார்.