(ரொபட் அன்டனி)

இறுதி யுத்தத்தின் போது கொத்தணிக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக நான் எங்கும் கூறவில்லை. அதுமட்டுமன்றி  அவ்வாறு கொத்தணிக்குண்டுகளை பயன்படுத்துவது சரியென்றும்  நான் கூறவில்லை. ஆனால் 2009 ஆம் ஆண்டு சர்வதேச சட்டத்தின் பிரகாரம்  கொத்தணிக்குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு தடை இருக்கவில்லையென்பதையே  நான் சுட்டிக்காட்டினேன்   என்று  காணாமல் போனோர்  தொடர்பில் விசாரணை நடத்தும்   ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். 

ஓய்வு பெற்ற நீதிபதி என்ற வகையில்  சர்ச்சை ஏற்படுத்தியுள்ள கொத்தணிக்குண்டு விவகாரத்தின் சட்டத் தன்மை தொடர்பில்  நாட்டு மக்களை தெளிவுபடுத்த வேண்டியது எனது கடமையாகும் எனவும் அவர்  குறிப்பிட்டார். 

இறுதி யுத்தத்தின் போது கொத்தணிக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக நான் எங்கும் கூறவில்லை. அதுமட்டுமன்றி  அவ்வாறு கொத்தணிக்குண்டுகளை பயன்படுத்துவது சரியென்றும்  நான் கூறவில்லை.  அவ்வாறு கொத்தணிக்குண்டுகளைப் பயன்படுத்துவது  நல்லதல்ல. அதனை  ஏற்றுக்கொள்ளவும் முடியாது எனவும் தெரிவித்தார். 

கொத்தணிக்குண்டு விவகாரத்தில் மக்ஸ்வெல் பரணகம    அநாவசியமான  கருத்தொன்றை வெளியிட்டுள்ளதாக   வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கண்டனம் தெரிவித்துள்ளமை தொடர்பில்   வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.