bestweb

தனது மகனை மீட்டுத்தருமாறு கோரி கண்ணீர்விட்ட தாய்

Published By: Digital Desk 4

28 Jul, 2020 | 12:55 PM
image

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிறீதரனிடம் தனது மகனை மீட்டுத்தருமாறு கோரி தாய் ஒருவர்  கண்ணீர்விட்டுள்ளார்.

குறித்த சம்பவம்  தொடர்பில் தெரிய வருவதாவது,

நேற்றையதினம் இரவு ஏழு மணியளவில் கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிறீதரனிடம் அதே பகுதியை சேர்ந்த தாயோருவர் தனது 17 வயது மகனை மீட்டுத்தருமாறு கோரி பிரச்சாரக் கூட்டத்தில் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்

கடந்த வருடம்  க.பொ.த சாதாரண பரிட்சைக்கு தோற்றிவிட்டு  குடும்ப கஸ்டம் காரணமாக  முந்திரிகை விதைகளை எடுத்து விற்றுவந்த அவர்  விற்ற முந்திரிகை விதைக்கான பணத்தினை பெற வீட்டில் இருந்து சென்ற எனது மகனை துப்பாக்கி சன்னங்கள் வைத்திருந்தார் என குற்றம் சாட்டி இராணுவத்தினர் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்

எவ்வித ஆதாரங்களும் அவர்களிடம் இல்லை வீட்டில் இருந்து காசு வாங்குவதற்காக சந்திக்கு சென்ற எனது மகனிடம் எவ்வாறு புதிய துப்பாக்கி சன்னங்கள் வந்தது இவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள விடயம்  எனது ஒரே ஒரு மகனை கடந்த 42 நாட்களாக சிறையில் விட்டு விட்டு மிகவும் மன உழைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றோம்.

எனவே அவரை எப்படியாவது நீங்கள் தான் மீட்டுத்தர வேண்டும் அவருடன் சேர்த்து மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளார்கள் என கண்ணீர் விட்டுக் கதறி உள்ளார்

குறித்த கைது விடயத்திற்கான சட்டவிடயங்களுக்கு தான் உதவுவதாக  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிறீதரன் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா - கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச்...

2025-07-19 01:23:07
news-image

தென்மேற்கு பருவமழை தீவிரம் : பல...

2025-07-19 01:20:20
news-image

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர்...

2025-07-19 01:11:43
news-image

முச்சக்கரவண்டி மற்றும் கார் மோதி விபத்து:...

2025-07-19 01:09:10
news-image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர்

2025-07-19 00:54:25
news-image

யாழ்ப்பாணத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயற்சிகள் வழங்க...

2025-07-18 21:25:41
news-image

மருந்துகளைப் பெற வைத்தியசாலைகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது...

2025-07-18 19:28:23
news-image

மருந்தாளுநர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காண திட்டமொன்று...

2025-07-18 20:29:55
news-image

விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது...

2025-07-18 19:30:03
news-image

புதிய கல்வி மறுசீரமைப்பு முறைமைக்கு ஆசிரியர்...

2025-07-18 16:53:19
news-image

கொழும்புத் திட்டத்தின் 74வது ஆண்டு விழாவில்...

2025-07-18 19:19:10
news-image

அரச சேவையாளர்கள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துடன்...

2025-07-18 17:42:16