இரு கட்சி ஆதரவாளர்களிற்கிடையே மோதல் - நால்வர் காயம்

Published By: Digital Desk 4

28 Jul, 2020 | 12:54 PM
image

வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் நேற்றையதினம் ரிஷாட்பதியூதீன் மற்றும் மஸ்தான் ஆகியோரது ஆதரவாளர்களிற்கிடையில் இடம்பெற்ற மோதலில் 4 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் சாளம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மஸ்தானின் ஆதரவாளர்கள்,

செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரகூட்டம் ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு சாளம்பைக்குளம் பகுதியில் ஒருவரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றிருந்தோம்.

இதன்போது அங்குவந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் ஆதரவாளர்கள் தம்மீது தாக்குதல் நடாத்தினர். இதனால் தமது ஆதரவாளர்கள் 6 பேர் காயமடைந்துள்ளதுடன், தமது வாகனங்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த ரிஷாட் பதியூதீனின் ஆதரவாளர்கள்,

தமது கிராமத்தில் அரசியல் வாதிகளின் சுவரொட்டிகள் எவையும் ஒட்டுவதற்கு தாம் அனுமதிப்பதில்லை என்றும் இது கிராமத்தில் வசிக்கும் பெரும்பான்மையான மக்களின் முடிவாக இருக்கும் நிலையில், மஸ்தானின் ஆதரவாளர்கள் கிராமத்திற்குள் வருகைதந்து சுவரொட்டிகளை ஒட்ட முனைந்ததாகவும், அதனை தடுக்க முற்பட்ட போது தம்மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவித்தனர். இதேவேளை தமது கிராமத்தை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தாக்குதலில் காயமடைந்துள்ளதாக தெரிவித்தனர். 

குறித்த சம்பவத்தால் இரண்டு தரப்பின் ஆதரவாளர்களும் சாளம்பைக்குளம் பகுதியில்  ஒன்று கூடியிருந்தனர் இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர், மற்றும் பூவரசங்குளம் பொலிசார், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன் குழப்ப நிலையை கட்டுப்படுத்தியிருந்தனர்.

இரவு 12 மணிக்கு பின்னர் நிலமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதுடன், விசேட அதிரடிபடையினர் மற்றும் துப்பாக்கி ஏந்திய பொலிசார் சாளம்பைக்குளம் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் சந்திக்க சென்றதாக தெரிவிக்கப்படுபவரின் குடும்பத்தினர் பாதுகாப்புகருதி பொலிசாரால் அழைத்து செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04