தேர்தலுக்கு சவாலாக அமையும் எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுப்பட கூடாது: தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை..! 

Published By: J.G.Stephan

28 Jul, 2020 | 12:01 PM
image

(எம்.மனோசித்ரா)

சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலுக்கு சவாலாக அமையும் எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுப்பட கூடாது என அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை தொடக்கம் திங்கட் கிழமை வரையிலான மதசார் விடுமுறை நாட்களை  காரணம் காட்டி விகாரைகள் உள்ளிட்ட  ஏனைய மதஸ்தலங்களில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார். 

திங்கட்கிழமை அரசியல் கட்சிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் ,

திங்கட்கிழமை அரசியல் கட்சிகளின் செயலாளர் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்களுக்கும் ஆணைக்குழு உறுப்பினர்களுக்குமிடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன் போது பல முக்கிய விடயங்கள்  பற்றி அவதானம் செலுத்தப்பட்டது. தேர்தல் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டதாக எமக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் பற்றியே அதிகம் பேசப்பட்டது.

தேர்தல் பிரசாரத்தின் போது மோட்டர்  சைக்கிள் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது. வடமேல் மாகாணத்திலேயே இவ்வாறு நடைபெற்றுள்ளது. இதே போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தளம் மாவட்டத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் மோட்டார் சைக்கிள் பேரணி இடம்பெற்றுள்ளது.

இவை தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு ஆணைக்குழு அறிவித்திருக்கிறது. இவ்வாறான மோட்டார் சைக்கிள் பேரணிகளின் மூலமே மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். அம்பாந்தோட்டையில் சைக்கிள் சவாரியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் ஆணைக்குழுவின் தலையீட்டில் அது தடுத்து நிறுத்தப்பட்டது. கல்முனை பிரதேசத்தில் வாகன  பேரணி செல்ல ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது அதுவும் தடுக்கப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகளை தடுப்பதற்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசியல் கட்சிகளிடம் நாம் கேட்டுக் கொண்டோம் என்றார். 

தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாக்களிப்பது தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. முன்கூட்டியே வாக்களிப்பதற்கான சட்டம் நாட்டில் இல்லை என்பதால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம். எனினும் அது சவாலுக்குரியதாகும்.

அத்தோடு இவ்விவகாரம் தொடர்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக பலரால் எமக்கு நினைவூட்டப்பட்டுள்ளது. முன்னரே வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஆணைக்குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே இந்த நிலைமைக்குள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதைப் போன்று தனிமைப்படுத்தல் நிலையங்களில் 31 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைச்சர் சமந்த வித்தியாரத்ன - அமெரிக்க...

2025-03-26 12:36:39
news-image

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதலாவது...

2025-03-26 12:48:24
news-image

போதைப்பொருள் கடத்தல்காரரான “படோவிட்ட அசங்க”வின் உதவியாளர்...

2025-03-26 12:53:34
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-26 13:07:41
news-image

வெலிகந்த பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியின்...

2025-03-26 12:38:35
news-image

வடக்கு மீனவர் பிரச்சனை ; இருதரப்பு...

2025-03-26 11:49:47
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய...

2025-03-26 11:36:32
news-image

இரவு நேர களியாட்ட விடுதி மோதல்...

2025-03-26 11:27:01
news-image

இலங்கை - பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச்...

2025-03-26 11:41:56
news-image

வெளிநாட்டு நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் இருந்து...

2025-03-26 11:43:27
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

2025-03-26 11:04:01
news-image

போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

2025-03-26 11:08:30