ஹட்டனில் இருந்து பொகவந்தலாவை நோக்கி பயணித்த லொறியொன்று ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் டின்சின் பகுதியில் வீதியை விட்டு 50அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் லொறியின் சாரதி காயங்களுக்கு உள்ளாகி பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை (27 07) 4 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

ஹட்டனிலிருந்து பொகவந்தலாவை பகுதியினை நோக்கி பயனித்த லொறி அதிக வேகமாக பயணித்ததன் காரணமாக குறித்த லொறி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

விபத்துக்குள்ளான காட்சி அருகாமையில் பொறுத்தப்பட்டிருந்த சீ.சீ.டிவி கமராவில் பதிவாகியிருந்தமையையடுத்து குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.