சிறுவர் துஷ்பிரயோகம் : கைதுசெய்யப்பட்ட மேடை வடிவமைப்பாளரிடம் ஆபாச இணையத் தளங்களுக்கு காட்சிகள் அனுப்பப்பட்டனவா என்ற கோணத்தில் விசாரணை

Published By: Digital Desk 3

28 Jul, 2020 | 12:38 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

தனியார் தொலைக்காட்சிகளில் பல்வேறு ரியலிட்டி ஷோ நிகழ்வுகளில் மேடை வடிவமைப்பாளராக கடமையாற்றிய 54 வயதான ஒருவர், அதனூடாகவும் தான் முன்னெடுத்து சென்ற பிரத்தியேக ஆங்கில வகுப்பு ஊடாகவும்  அறிமுகமாகிய சிறுவர்களை துஷ்பிரயோகம்  செய்து, புகைப்படம், வீடியோ எடுத்த சம்பவம் குறித்த விசாரணைகள் முறைப்பாடுகள் எதுவும் இன்றி கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையவே ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். 

இதனால் குறித்த சந்தேகநபரால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் அல்லது,  தனது  பிள்ளைகள் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியிருக்கலாம் என சந்தேகிக்கும் பெற்றோர் அது தொடர்பில் 1929 எனும்  அவசர அழைப்பு இலக்கத்துக்கு அறிவிக்குமாரும் அவர் கோரினார்.

தனியார் தொதலைக்காட்சிகளில் பல்வேறு ரியலிட்டி ஷோ நிகழ்வுகளில் மேடை வடிவமைப்பாளராக கடமையாற்றிய 54 வயதான குறித்த சந்தேகநபர், வெளிநாடொன்றில் உள்ள ஒருவருக்கு இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்படும் சிறுவர் ஒருவரின் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்வையிட்டுள்ள அங்குள்ள ஒருவர், அது தொடர்பில் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அப்புகைப்படங்களை வட்ஸ் அப் ஊடாக  அனுப்பியுள்ளார்.

இந்நிலையிலேயே அது குறித்து விசாரிக்குமாறு கொள்ளுபிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குணசேகரவுக்கு  அதிகாரம் வழங்கியுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இது தொடர்பில்  விஷேட விசாரணை நிபுணத்துவம் கொண்ட மாத்தறை சிறுவர் மகளிர் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தவை கொழும்புக்கு அழைத்து விசாரணையின் பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளார். 

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே, மஹரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெபானம - பன்னிபிட்டிய எனும் முகவரியைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என  பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

'பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த தலைமையில், கொள்ளுபிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில் இடம்பெற்ற விசாரணைகளில், இதுவரை மூன்று ஆண் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

தான் நடாத்திச் சென்ற தனியார் வகுப்பு மற்றும் தனியார் தொதலைக்காட்சிகளில் பல்வேறு ரியலிட்டி ஷோ நிகழ்வுகளில் மேடை வடிவமைப்பின் போது பழகி அறிமுகமான சிறுவர்களை சந்தேக நபர் இவ்வாறு  தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு முதல் சந்தேக நபர் இந்த குற்றத்தை செய்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது. அவர் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்து அதனை புகைப்படம், வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் அவற்றை தனிப்பட்ட ரீதியில் பலருக்கு அனுப்பியுள்ளதாக தகவல் உள்ளது. ஏதேனும் ஆபாச இணையத் தளங்களுக்கு அவரால் வீடியோ காட்சிகள் அனுப்பப்பட்டனவா எனவும் விசாரணை நடக்கின்றது. அவ்வாறு அனுப்பட்டிருந்தால் அந்த காட்சிகளை இணையத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். சந்தேக நபரின் வீட்டிலிருந்து மேலும் பல சிறுவர்களின் புகைப்படங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அது குறித்து விசாரித்து வருகின்றோம். இவர்களைவிட மேலும் பல சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.

இதுவரை சந்தேக நபரிடம் இருந்து  மேசைக் கணினி,  கமராக்கள் 2, பென் ட்ரைவ் ஒன்று, மெமரி சிப் ஒன்று,  137 இறுவெட்டுக்கள், 17 சிறுவர்களின் புகைப்படங்கள், கையடக்கத் தொலைபேசி ஒன்று என்பன விசாரணைகளுக்காக பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.

அவை அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஊடாக அல்லது கணினி தொடர்பிலான விஷேட நிபுணர் ஒருவர் ஊடாக பரிசீலிக்கப்பட்டு அவற்றில் உள்ள உள்ளடக்கங்கள் வெளிப்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறும்.  சந்தேக நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்' என தெரிவித்தார்.

இதனிடையே,  இந்த விவகாரத்தில் மேலும் இரு சந்தேக நபர்களைக் கைது செய்யவுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18
news-image

வற் வரியை நீக்குமாறும் மீன்பிடியை ஊக்குவிக்குமாறும்...

2025-02-14 17:29:15
news-image

இணையத்தளம் மூலம் 29 இலட்சம் ரூபா...

2025-02-14 19:03:13
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த...

2025-02-14 16:51:12
news-image

பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு வேலைத்திட்டங்களை...

2025-02-14 17:21:03
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத்...

2025-02-14 16:58:28
news-image

நானுஓயாவில் வீடொன்றில் தாழிறங்கிய நிலம்! -...

2025-02-14 16:49:29