போலி விசாவைப் பயன்படுத்தி துருக்கி ஊடாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த இலங்கையர்கள் நால்வரை குற்றப்புலனாய்புப் பிரிவினர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் யாழ். முள்ளிபுரம் மற்றும் இளவாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 முதல் 33 வயதுக்கிடைப்பட்ட இளைஞர் யுவதிகளாவார்.

மேலும், இவர்களில் மூவர் சகோதர சகோதரிகள் என்பது தெரியவந்துள்ளது. 

துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான டி.கே 731 இலக்க விமானத்திலே இவர்கள் செல்ல இருந்தமை குறிப்பிடத்தக்கது.

குற்றப்புலனாய்புப் பிரிவினர் குறித்த நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர்களை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.