பினைன் ப்ராஸ்டடிக் ஹைப்பர்ப்ளேசியா என்ற பாதிப்புக்குரிய சிகிச்சை

By T Yuwaraj

27 Jul, 2020 | 07:11 PM
image

50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு. அவர்களின் சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தால் அவர்களுக்கு பினைன் ப்ராஸ்டடிக் ஹைபர்ப்ளேசியா என்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று பொருள் கொள்ளலாம். இதற்கு தற்போது நவீன சத்திரசிகிச்சை அறிமுகமாகி இருக்கிறது.

வயது அதிகரிக்க அதிகரிக்க தலைமுடி நரைப்பதை போல்... சருமம் சுருங்குவதை போல். வயோதிகத்தின் அடையாளமாக ஆண்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக இருக்கும் புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் அடைகிறது. இதன் காரணமாக பினைன் ப்ராஸ்டடிக் ஹைபர்ப்ளேசியா என்ற பாதிப்பு உருவாகிறது.

இந்த புரோஸ்டேட் சுரப்பி எனப்படும் பாலியல் சுரப்பி, வயது ஆக ஆக அதன் அளவும் பெரிதாகிக் கொண்டே இருக்கும். 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இதனால் பிரச்சனை ஏதும் பெரிதளவில் தோன்றுவதில்லை. ஆனால் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 50 சதவீதத்துக்கும் 700 வயதிற்கு மேற்பட்டவர்களில் 90 சதவீத ஆண்களுக்கும் இத்தகைய பாதிப்பின் அறிகுறிகள் காணப்படுகிறது.

சிறுநீர் கழிப்பதில் சிரமம், அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றுதல், சிறுநீர் முழுமையாக கழித்த பின்னரும்... சொட்டு சொட்டாக சிறிய அளவில் வெளியேறுதல், இரவில் பலமுறை சிறுநீர் கழிக்கத் தோன்றுதல் உதாரணத்திற்கு 5க்கும் மேற்பட்ட முறையை எழுந்து சிறுநீர் கழித்தல், மிக அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றுதல், சிறுநீர் பிரியும் வேகம் குறைதல், சிறுநீரில் சிறிதளவோ அல்லது விட்டுவிட்டோ ரத்தம் வெளியேறுதல்.... இவையெல்லாம் உங்களுக்கு பி பி. ஹெச் எனப்படும் பினைன் ப்ராஸ்டடிக் ஹைபர்ப்ளேசியா பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளாகும்.

இத்தகைய பிரச்சனையை டிஜிட்டல் ரெக்டல் எக்ஸாமினேஷன், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், யூரோப்ளோமெட்ரி மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை மூலம் இதன் பாதிப்பை உறுதிப்படுத்தலாம். சிலருக்கு மட்டும் பி. எஸ். ஏ எனப்படும் பரிசோதனையும் அவசியப்படலாம்.

இத்தகைய பாதிப்பிற்கு நான்கு நிலைகள் இருப்பதை மருத்துவர்கள் வரையறுத்திருக்கிறார்கள். இதில் ஒன்று முதல் மூன்றாம் நிலை வரைக்கும் பாதிப்பு இருந்தால், அதனை மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தி குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கும் கட்டுப்படாமல், தொல்லைகள் அதிகரித்தல் TURP டர்ப் எனப்படும் சத்திரசிகிச்சை செய்து இப்பிரச்சனையை குணப்படுத்தலாம்

டொக்டர் அஹ்மத்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right