கினிகத்தேன - ஹட்டன் பிரதான வீதியூடாக  எரிவாயு ஏற்றிச் சென்ற  பாரஊர்தி ஒன்று, ரொசல்ல செல்லும் பிரதான பாதை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மோதியதில் முச்சக்கர வண்டி 30 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது என வட்டவளை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து நேற்று 26 ஆம் திகதி ஹட்டன் கொழும்பு பிரதான வீதி வட்டவல ரொசல்ல சந்தியில் இடம்பெற்றுள்ளது. 

எரிவாயு ஏற்றி சென்ற பாரஊர்தியில் திடீரென முன்சக்கரம் கழள்றதில் முன்னால் இருந்த முச்சக்கர வண்டியில் பாரஊர்தி மோதுண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் எவரும் காயமடையவில்லை இருந்தபோதும் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. எரிபொருள் ஏற்றி வந்த பாரஊர்தி வேறு வாகனங்களில் மோதியிருந்தால் தீ பரவல் ஏற்பட்டிருக்க கூடும் என பொலிசார் தெரிவித்தனர்.