பிரபல பொலிவூட் நடிகையான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியா ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
பிரபல பொலிவூட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 11 ஆம் திகதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் மும்பையில் உள்ள நனாவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவுகள் கடந்த 12 ஆம் திகதி வெளியானது. அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது.
ஆனால் அபிஷேக் பச்சனின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது ஆரத்யாவுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது.
இதையடுத்து இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால் கடந்த 18 ஆம் திகதி அதிகாலை ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனால், இருவரும் அமிதாப் மற்றும் அபிஷேக் சிகிச்சை பெற்றுவந்த நனாவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆரத்யாவுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளதாகவும், இதையடுத்து இருவரும் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அபிஷேக் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், தனக்கும், தந்தை அமிதாப் பச்சனும் இன்னும் கொரோனாவில் இருந்து குணமடையாததால் தொடர்ந்து வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெற்றுவருவதாகவும், குடும்பத்தினர் கொரோனாவில் இருந்து குணமடைய தொடர்ந்து பிரார்த்தனை செய்துவரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அபிஷேக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM