நாட்டுக்கு நன்மையளிக்கும் எந்த திட்டமும் ராஜபக்ஷர்களிடம் இல்லை - சம்பிக்க ரணவக்க

27 Jul, 2020 | 04:12 PM
image

(செ.தேன்மொழி)

ராஜபக்ஷர்களிடம் நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தும் எந்த வேலைத்திட்டமும் இல்லை என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியிக் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சம்பிக்க ரணவக்க, ஆளும் தரப்பினர் நல்லாட்சி அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட செயற்திட்டங்களை தங்களது திட்டங்களாக குறிப்பிட்டு அவற்றை திறந்து வைத்துவருகின்றனர் எனவும் குற்றஞ்சாட்டினார்.

கொட்டாவ பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ராஜபக்ஷர்களிடமும் , அவர்களது தரப்பினரிடமும் நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தும் வகையில் எந்த வேலைத்திட்டங்களும் இல்லை. அமைச்சர் தினேஷ் குணவர்தன 15 வருடகாலமாக அரசியலில் இருந்தும் எந்தவொரு வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் கடந்த ஆட்சிகாலத்தில் நாங்கள் ஆரம்பித்து வைத்த செயற்திட்டங்களை அவர்களது செயற்திட்டமாக குறிப்பிட்டு தற்போது மக்களின் பாவனைக்காக திறந்துவைப்பதுடன் மாத்திரமன்றி அதனை அவர்களது திட்டம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இது மிகவும் கீழ்தரமான செயற்பாடாகும். கொழும்புக்குள் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கத்தில் நாங்கள் அறிமுகப்படுத்திய சில திட்டங்களை அம்பாந்தோட்டையில் மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நாங்கள் ஆரம்பித்து வைத்த தொழிநுட்ப கல்லூரிக்க ராஜப்பஷர்களின் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அது மட்டுமன்றி 52 நாள் அரசியல் நெருக்கடியின் போது இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த வேலைத்திட்டங்களை நிறுத்தி வைத்தனர். அதற்கு பின்னர் நாங்கள் மீண்டும் அவற்றை நிவர்த்தி செய்ததுடன் , தற்போது அவர்களது தலைமையில் அதனை திறந்து வைக்க தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை ராஜபக்ஷர்கள் எந்தவித தலையிடும் செய்யாத சில வேலைத்திட்டங்கள் இருக்கின்றனர். அதில் அவர்கள் தலையிட்டால் எமது பெயரும் பேசப்படும் என்ற அச்சத்திலே அதனை செய்யாமல் இருக்கின்றனர். இந்நிலையில் 2005 - 2010 ஆகிய ஆண்டுகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் எவ்வித வேலைத்திட்டங்களும் இருக்கவில்லை. அவரது கொள்கை நான்தான் தயாரித்தேன். அதற்கு மஹிந்த சிந்தனை என்ற பெயர் மாத்திரமே சூட்டப்பட்டது. எவருக்கேனும் அதில் சந்தேகம் ஏற்பட்டால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தபாகர் பசில் ராஜபக்ஷரிடம் கேட்டு அறிந்துக் கொள்ளுங்கள்.

--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02