(எம்.மனோசித்ரா)
ஆசிரியர்களின் தேர்தல் பணிகளுக்கான கடிதங்களை கையளிக்கும் பொறுப்பு அதிபர்களுடையதாகும். எதிர்வரும் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் தேர்தல் உத்தியோக கடிதங்கள் கிடைக்கப் பெறாத அரச ஊழியர்கள் உடனடியாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அது பற்றி கேட்டறிய வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதே வேளை தவிர்க்க முடியாத காரணத்தினால் அன்றி வேறு எதற்காகவும் தேர்தல் கடமைகளை புறக்கணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அவ்வாறு புறக்கணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
தரம் 11 , 12 மற்றும் 13 இல் கற்கும் மாணவர்களுக்கு மாத்திரமே திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ளன. அவ்வாறெனில் குறித்த வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மாத்திரமே பாடசாலைக்கு வருகை தருவார்கள். ஆனால் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளவர்களில் 50 சத வீதத்திற்கும் அதிகமானவர்கள் ஆசிரியர்களாவர்.
இவர்களுக்கான தேர்தல் பணிக்கான கடிதம் வழமையாக பாடசாலைகளுக்கே அனுப்பப்படும். ஆனால் தற்போது பாடசாலை விடுமுறை என்பதால் வீடுகளுக்கும் பாடசாலைகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்புகின்ற கடிதங்களில் பாடசாலைக்கு கிடைக்கும் கடிதங்களை உரிய ஆசிரியர்களிடம் கையளிக்க வேண்டிய பொறுப்பு அதிபர்களுடையதாகும்.
தபால் மூலம் வாக்களிக்கும் அனைத்து அரச ஊழியர்களில் தேர்தல் கடமைக்கு நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இம் மாதம் 31 ஆம் திகதி வரை அதற்கான கடிதம் கிடைக்கப் பெறவில்லையாயின் அது தொடர்பில் உடனடியாக உரிய மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் விசாரிக்க வேண்டியது கட்டாயமாகும்.
அவ்வாறில்லை என்றால் தேர்தல் கடமைகளை புறக்கணிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தினால் அன்றி வேறு எதற்காகவும் தேர்தல் கடமைகளை புறக்கணிப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. வேறு பொது இடங்களை விட வாக்கெடுப்பு நிலையங்கள் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அற்றதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM