விஜய் பட நாயகி ஒருவர் தற்போது அஜித் நடிக்கும் புதிய படத்துக்கு அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்...

அஜித் நடிப்பில் அவரது 57 ஆவது படமாக உருவாகவிருக்கும் படத்தை சிறுத்தை ‘சிவா’ இயக்கவிருக்கிறார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் எளிமையாக நடைபெற்றது. 

இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த படக்குழுவினர், தற்போது காஜல் அகர்வாலை இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

காஜல் அகர்வால் தற்போது ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’ படத்தில் நடித்து வருகிறார். ஏற்கெனவே, விஜய்யுடன் ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ ஆகிய படங்களிலும் சூர்யா, தனு, கார்த்தி ஆகியோர் படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தல 57’ படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகவிருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவை கவனிக்கிறார். இந்த மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர்.