அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் பொலிஸாருக்கு எதிராக நடைபெற்ற போராட்ட பேரணியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பொலிஸ் அதிகாரிகள் பலியாகியதோடு மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

'கருப்பு இன மக்களின் உயிரும் கருத்தில்கொள்ளத்தக்கது' (Black Lives Matter) எனத் தலைப்பில் குறித்த பேரணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் லூசியாணா, மினசோட்டா மாகாணங்களில் இரு வேறு சம்பவங்களில் கருப்பின இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில் கருப்பின இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டல்லாஸ் மாகாணத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது உயரமான இடத்தில் மறைந்திருந்த துப்பாக்கி ஏந்திய சிலர் பொலிஸாரை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். 

இதில் 4 பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.