ரஷ்ய கடற்பரப்பில் செல்லும் நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு ரஷ்ய விண்வெளி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை கோள் ஒன்று மர்மமான முறையில் மறைந்துள்ளது.

கடந்த 5ஆம் திகதி சோயூஸ் ராக்கெட் மூலம் ரஷ்யாவின் மிர்னி நகரில் இருந்து இராணுவ உபயோகத்துக்காக அதிநவீன செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது.

அந்த செயற்கை கோள் ஏவுகனையில் இருந்து பிரிந்த பிறகு கட்டுப்பாட்டை இழந்து மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது