விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான ப்ரெண்ட்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவரே நடிகை விஜயலட்சுமி. இவர் தொடர்ச்சியாக சர்ச்சைகளுக்கு முகங்கொடுத்து வருகிறார். 

இவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் தற்கொலை செய்து கொள்ள போவதாக பதிவு செய்துள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் "என்னை இரண்டு நபர்கள் அவமானப்படுத்தியதாகவும் அதனால் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் இருவரும் முன் ஜாமீன் எடுக்க யாரும் அனுமதிக்ககூடாது என்றும், எனது மரணத்திற்கு அந்த இருவரையும் கைது செய்ய வேண்டும் என அவர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நான் இன்னும் ரொம்ப நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஆனால் என்னை வாழ விடாமல் செய்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.

இதனிடையே நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்று, தற்போது அடையார் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் தகவல் வெளியுள்ளது.