முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க விசாரணை ஒன்றிற்காக குற்றப்புலனாய்வு பிரிவில் இன்று காலை ஆஜராகினார். 

மத்திய வங்கியின் பிணைமுறிகள் மோசடி  தொடர்பிலான விவகாரத்தில், வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஆஜராக வேண்டுமென, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த அழைப்பாணையை விடுத்திருந்த நிலையிலேயே அவர் இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.